சந்திரயான் 3.. கமெண்ட் அடித்து நெட்டிசன்களிடம் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் - தற்போது கொடுத்த விளக்கம் என்ன?
இந்தியாவின் கனவுகள் திட்டமான சந்திரயான் 3 தற்பொழுது நிலவை நெருங்கி வருகிறது. இது குறித்து இந்தியர்களே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட ஒரு கார்ட்டூன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ் அவர்கள், சினிமாவிற்கு இணையாக அரசியல் தளத்திலும் முழுமையாக ஈடுபாடு செலுத்தி வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக கடுமையாக பல கருத்துக்களை தொடர்ச்சியாக அவர் முன்வைத்துகொண்டே வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம், அதன் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நேற்று ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் சில அரிய புகைப்படங்களை எடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது சந்திராயன் 3.
இதனையடுத்து, அந்த புகைப்படங்களை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "வாவ்.. நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம் இது", என்று குறிப்பிட்டு, ஒருவர் டீ ஆத்துவது போன்ற கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரகாஷ் ராஜ்.
Vikram Lander தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்! நடக்கப்போவது என்ன?
உடனே அது மிகப் பெரிய விவாத பொருளாக மாறியது, மோடியின் ஆதரவாளர்களும், அறிவியல் ஆதரவாளர்கள் பலரும் பிரகாஷ்ராஜின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அவருடைய பதிவில் கடுமையாக கமெண்ட்களையும் செய்து வந்தனர்.
இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் ஒரு பதில் அளித்துள்ளார். அதில் "நான் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டது ஒரு பழைய ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக், அதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?" என்று கேட்டுள்ளார்.
அவர் சொல்லவந்தது.. அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் எங்கு சென்றாலும் டீக்கடை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வார்கள் என்று கூறுவார்கள். அதே போல நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்ற பொழுதும் கூட அங்கே ஒரு மலையாளத்து காரர் அங்கு டீ ஆதிக்கொண்டிருந்தார் என்று நகைப்புடன் கூறும் ஒரு பழைய ஜோக் உள்ளது.
அதை மேற்கோள் காட்டித்தான், தான் அந்த கார்ட்டூனை வெளியிட்டதாகவும், இதை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும் என்றும் அவர் வினைவியுள்ளார்.
பெங்களூருவுக்கு வந்த பில்கேட்ஸ்.. மைக்ரோசாப்ட் ஓனர் சந்தித்த பெண் யார் தெரியுமா.? அடேங்கப்பா இவரா