பதபதவைக்கும் நிமிடங்கள்; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிங்குவதில் என்ன சிக்கல்?
இந்தியாவும், ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்பி இருந்தன. ரஷ்யா அனுப்பி இருந்த லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி உடைந்தது. இதற்குக் காரணம், விண்வெளிக்கு வெளியே செய்யப்பட்ட சிறிய மாற்றம் என்று கூறப்படுகிறது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் விண்கலத்தை ஏவி தோல்வியை சந்தித்தன. இந்தியாவின் சார்பில் 2019ஆம் ஆண்டில் சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விண்கலம் பாதியளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியபோது கால் உடைந்ததால் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான் தற்போது சந்திரயான் 3 நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தென் துருவம் கரடுமுரடானது:
எனவே, நிலவின் பூமத்திய ரேகையுடன் ஒப்பிடும்போது, அதன் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான் 3 விண்கலத்தை மென்மையாக தரையிறக்குவது கடினமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது தென் துருவம் கரடுமுரடானது. இத்துடன் தென் துருவப் பகுதியில் சூரியனின் வெளிச்சம்படுவதில்லை. எப்போதும் இருள் சூழ்ந்து காணப்படும். சூரியன் ஒளி இல்லாத காரணத்தால் மிகவும் பனி படர்ந்த துருவமாக பார்க்கப்படுகிறது. இங்கு பனி படிவங்கள் மற்றும் ஐஸ் படிவங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நிலவில் நீர் மூலக்கூறுகள்:
2009 ஆம் ஆண்டில், சந்திரயான் -1, நாசாவின் நிலவு கனிமவியல் மேப்பர் ஆகியவை நிலவின் தென் துருவத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அறிவித்தன. அரை நூற்றாண்டுக்கு முன்பு, அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் நில அதிர்வு கருவிகளை விட்டுச் சென்றுள்ளனர். நிலவு உயிர்ப்புடன் இருப்பது இந்தக் கருவியின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவின் மேற்பரப்பிற்கு கீழே ஆழத்தில் சில நடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும், விண்கல் தாக்கங்களிலிருந்து அதிர்வுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்து இருந்தது.
நிலவில் நிலநடுக்கமா?
நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் சில மைல்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டாலும், இதை விளக்க முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் நிலவின் வெப்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். உந்துவிசை அழுத்தம் காரணமாக நிலவின் மேற்பரப்பு வெப்பத்தை இழந்து, குளிர்ச்சியாகி சுருங்குகிறது என்று கூறப்பட்டது. நிலவின் மேற்பரப்பு சுருங்கும்போது, நிலவின் மேலோடுகள், அதாவது பிளவுகள் போன்ற அமைப்புகளை உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தங்க நிற தகடால் மூடப்பட்ட சந்திரயான் 3.. மறைந்திருக்கும் சூட்சமம் என்ன? கேட்டா பிரமிச்சுபோய்டுவிங்க!
தென்துருவத்தில் மேடுபள்ளங்கள்:
தற்போது சந்திரயான் 3 இறக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடங்களும் மேடுபள்ளங்கள் நிறைந்தது மட்டுமின்றி பிளவுகள் போன்ற மேற்பரப்பை கொண்டுள்ளன என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக தென் துருவத்தில் சூரிய ஒளிபடாமல் ஏற்பட்ட குளிர்ச்சியால் பனிக்கட்டிகள் உருவாகி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதி 300 டிகிரி பாரன்ஹீட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிலவில் ஆக்சிஜன்:
நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டியானது எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இது விண்வெளி வீரர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளை உற்பத்தி செய்யவும் மற்றும் நிலவுக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு இடையேயான விண்வெளி பயணத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
- Asianet News Tamil
- Chandrayaan 3 live news
- Chandrayaan 3 ISRO
- Chandrayaan 3 latest news
- Chandrayaan 3 launch moon landing
- Chandrayaan 3 live
- Chandrayaan 3 soft landing live
- Chandrayaan-3
- Chandrayaan-3 images
- Chandrayaan-3 lander name
- Chandrayaan-3 landing date
- Chandrayaan-3 landing time
- Chandrayaan-3 launch place
- Chandrayaan-3 moon landing
- Chandrayaan-3 photos
- Chandrayaan-3 south pole landing
- ISRO
- India
- Indian Space Research Organisation
- S Somnath
- Vikram lander
- chandrayaan 3 landing
- vikram lander images