விக்ரம் லேண்டரை தரையிறக்க புது யுக்தியை கையாளும் ISRO - சந்திரயான் 2க்கும் இதற்கும் என்ன வேறுபாடு தெரியுமா?
பல உலக நாடுகளின் பார்வை தற்பொழுது இந்தியாவின் மீது திரும்பி உள்ளது, இதற்கு ஒரே காரணம், முதல் முறையாக நிலவின் தென்பகுதியில் களமிறங்க உள்ள இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 தான் என்றால் அது மிகையல்ல.
கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 2.35 நிமிடத்திற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவை நோக்கிய தனது பயணத்தில் தற்பொழுது முக்கிய கட்டத்தில் உள்ள சந்திரயான் நிலவை தற்போது நெருங்கி உள்ளது.
நேற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையின்படி, சந்திரயான் திட்டமிட்டபடி 23ம் தேதி மாலை 6 மணி 4 நிமிடங்களுக்கு தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால், அந்த தரையிறங்கும் முயற்சி ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
நிலவின் தெற்கு பகுதியில் இந்த விண்கலமானது தரையிறங்க ஏதுவான இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பாறைகளும் சிறு சிறு கற்களும் பெரிய அளவில் இல்லாத பகுதியில் விண்கலத்தை தரையிறக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறது லேண்டர். அண்மையில் சந்திரயான் 3ல் பொருத்தப்பட்டுள்ள LHDAC கருவி நிலவின் சில பாகங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Draining Apps : பேட்டரியைக் குறைக்கும் 43 ஆப்ஸ்கள் இதுதான்.. உடனே மொபைலில் இருந்து நீக்குங்க.!!
ஏற்கனவே ரஷ்யா அனுப்பிய அவர்களுடைய விண்கலம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு நிலவில் விழுந்து நொறுங்கிய நிலையில், இந்திய விஞ்ஞானிகள் தங்கள் ஒவ்வொரு நகர்வையும் வெகு நேர்த்தியாக நகர்த்தி வருகின்றனர். எந்த விதத்திலும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நகர்வையும் மிக துல்லியமாக கணித்து செயல்படுகின்றனர்.
இது இந்திய விண்வெளித் துறைக்கு மாபெரும் மணிமகுடமாக அமைய உள்ள நிலையில் இதற்கு முன்னதாக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து எந்த அளவில் இந்த சந்திரயான் 3 மாறுபட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சந்திரயான் 2 vs சந்திரயான் 3
சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் நேரத்தில் ஏற்பட்ட சில கோளாறால் அது நிலவில் விழுந்து நொறுங்கியது, ஆகையால் அந்த தவறுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முறை விண்கலத்தை தரையிறக்க அதன் கீழே நான்கு சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் வேகத்தை மென்மையானதாக மாற்ற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டுகளின் வேகம் குறைவானது என்பதால் இதனால் பெரிய அளவில் துளிகள் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சென்ற முறை சந்திரயான் 2ல் நடந்த தவறுகளை செய்யாமல் இருக்க இந்த கூடுதல் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது என்றும். இதன் மூலமாக நிலவில் மென்மையாக லேண்டர் தரையிறக்கப்பட்டு, அதிலிருந்து வெளியே வரும் ரோவர், லேண்டரை புகை படம் எடுக்க, லேண்டர் ரோவரை புகைபடம் எடுக்க இந்தியாவின் கனவு திட்டம் மெய்யாகும்.
தங்க நிற தகடால் மூடப்பட்ட சந்திரயான் 3.. மறைந்திருக்கும் சூட்சமம் என்ன? கேட்டா பிரமிச்சுபோய்டுவிங்க!