சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத வெள்ளத்தால், ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக கடந்த வாரம் ஏற்பட்டது.

"நிரபுத்தரி" என்னும் ஆண்டுற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன் , யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

கோவிலுக்கு நெல் கதிர் கொண்டு போவதற்கு உள்ள அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டதாலும் , காட்டாற்று.வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலை ப்ரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்னும் சூழ்நிலையில், ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி என்னும் 4 இளைஞர்கள் இந்த நெற்கதிர் கொண்டுவரும் பொறுப்பு ஏற்று, தங்கள் உயிரைப் பணையம் வைத்து செல்ல முடிவெடுத்தனர்.  

காட்டாற்று வெள்ளமாக , மரங்களும் மற்றும் பாம்புகள் என பலவும் அடித்து செல்லும், கரை புரண்டு ஓடும் பம்பையாற்றை  பல அணைகள் நிரம்பி வழிந்து, பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில், யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து , பெரும் சாகசமாக நீந்திக் கடந்து, அக்கரை சேர்ந்து குறித்த நேரத்தில் சபரிமலை கோயில் சடங்கு நடைபெறும்படி கொண்டு சேர்த்திருக்கிறார்கள் அந்த அந்த 4 இளைஞர்கள். கிருஸ்துவ இளைஞர்களின் இந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

கிருஸ்துவ இளைஞர்கள் 4 பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மற்ற மதத்தின் தெய்வம் என பார்க்காமல் தெய்வ நம்பிக்கையை சாஸ்தர சம்பரதாயத்தையும் மதித்து இப்படி ஒரு செயலை செய்த அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.