Asianet News TamilAsianet News Tamil

யாரும் இந்த சிரப்பை பயன்படுத்தாதீங்க.. DGCI எச்சரிக்கை.. மருந்துகளை திரும்ப பெற்ற பிரபல நிறுவனம்..

கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் Digene Gelஐப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது

Abott India recalls antacid digene gel after dgci advisory warning Rya
Author
First Published Sep 6, 2023, 2:16 PM IST

அபோட் (Abbott) நிறுவனத்தின் ஆன்டாக்சிட் டைஜீன் (Antacid Digene gel) மருந்துக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் Digene Gelஐப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், கோவா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பேட்ச் மருந்துகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளை இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தும்படியும், அந்த மருந்தை உட்கொள்வதால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில/யூனியன் பிரதேசம்/மண்டல மற்றும் துணை மண்டல அலுவலர்கள், சந்தையில் விற்கப்படும் மருந்துப் பொருட்களின் இயக்கம், விற்பனை, விநியோகம், இருப்பு ஆகியவற்றைக் கடுமையாகக் கண்காணிக்கவும், தயாரிப்பு சந்தையில் கிடக்கும்பட்சத்தில் மாதிரிகளை எடுத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் உத்தர்விட்டுள்ளது.

எழுத்துப் பிழையுன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பதிவிட்ட காங்கிரஸ்.. "வெட்கக்கேடு" என பாஜக விமர்சனம்

அபோட் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “ருசி மற்றும் வாசனை குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார்கள் காரணமாக, எங்கள் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட Digene Gel ஆன்டாக்சிட் மருந்தை இந்தியாவில் உள்ள எங்கள் நிறுவனம் தானாக முன்வந்து திரும்பப் பெற்றுள்ளது. நோயாளியின் உடல்நிலை கவலைக்கிடமானதாக எந்த அறிக்கையும் இல்லை. Digene Gel  மருந்தின் மற்ற வடிவங்களான டேப்லெட்டுகள் மற்றும் ஸ்டிக் பேக்குகள் பாதிக்கப்படாது. எங்கள் பிற உற்பத்தி தளத்தில் தயாரிக்கப்படும் Digene Gel பாதிக்கப்படாது. மேலும் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு தொடர்ந்து கிடைக்கிறது.” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி Digene Gel Mint பாட்டில் மருந்து வழக்கமான சுவை (இனிப்பு) மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும், அதே பேட்சின் மற்றொரு பாட்டில் கசப்பான சுவை மற்றும் கடுமையான வாசனையுடன் வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து கடந்த மாதம்  லிமிடெட் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த மருந்து தயாரிப்பை தானாக முன்வந்து திரும்ப பெறுவதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதன்படி கோவாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை தயாரிப்புகளின் உற்பத்தியையும் தானாக முன்வந்து நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios