Asianet News TamilAsianet News Tamil

விமானத்தை பறிகொடுத்துவிட்டு "டீ" குடித்தேன் என கிண்டல் அடித்தார்கள்... கர்வம் குறையாத கம்பீர அபிநந்தன்!!

நான் சென்ற மிக் விமானத்தை பறிகொடுத்து தேநீர் அருந்தினேன் என்று கூறி கிண்டல் செய்தார்கள்.ஆனால் அவர்களுக்கு தெரியுமா நான் அழித்தது எவ்வளவு விலையென்று? என கம்பீர சிரிப்புடன் கெத்து காட்டியிருக்கிறார் அபிநந்தன்.

Abinandha exclusive interview
Author
India, First Published Mar 2, 2019, 10:53 PM IST

மிக்-21 பைஸன் என்னும் போர் விமானம், பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியதில் இந்திய விமானப்படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் பாக். ஆர்மியிடம் சிக்கிகொண்டார். 

பின்னர், அவரை ராவல்பிண்டியிலுள்ள போர்க் கைதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்றது பாக் ராணுவம். இதன் பின் நல்லிணக்க அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கப்பட இருக்கிறார் என்று பாக். பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.பிறகு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேற்று பிற்பகல் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார். 

இதனால் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் அபிநந்தனை வரவேற்பதற்காக கூடினார்கள். பிற்பகல் மூன்று அளவில் இந்திய எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், நேரம் அதிகமாகி இரவு 9 மணிக்கு மேல்தான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்.

Abinandha exclusive interview

இந்நிலையில் இன்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்த பின் மாவீரர் அபிநந்தன் இன்று அளித்த தன்னிலை விளக்கம் அளித்தார்.

அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கத்தில் நான் இந்தியன்டா என நாடி நரம்புகளை மெய் சிலிர்க்க வைக்கும் தகவல்களை கூறியிருந்தார் அதில், பத்திரிக்கையாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடையாது. அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன்.

நான் சென்ற மிக் விமானத்தை பறிகொடுத்து தேநீர் அருந்தினேன் என்று கூறி கிண்டல் செய்தார்கள். மிக் விமானத்தின் விலை 15 கோடி ரூபாய். நான் குண்டு வீசி அழித்த பாகிஸ்தான் விமானத்தின் F16ன் விலை 250 கோடி என்பதை மனதில் நினைத்து சிரித்து கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios