பாகிஸ்தானில் இந்திய தூதர அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விமானி அபிநந்தன் இன்னும் சில மணி நேரங்களில் இந்தியாவை வந்தடைய இருக்கிறார். 

முன்னதாக ராவல்பிண்டி ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்த அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முழு ஆரோக்கியத்துடன் அவர் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து இஸ்லாமாபாத் அழைத்து வரப்பட்டுள்ள அவர் இந்திய தூதரக அதிகாரிகளுடன் வாகா எல்லைக்கு 3 அல்லது நான்கு மணிக்கு வந்து சேர உள்ளார்.

 

அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வாகா எல்லையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அபிநந்தன் இந்தியா வந்து சேர்ந்த உடன் குடும்பத்தினரை சந்தித்த பின், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு முதலில் அழைத்துச் செல்லப்படுவார். அதன்பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். 

அங்கு அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். அடுத்து பாகிஸ்தானில் அவர் நடத்தப்பட்ட விதங்கள் குறித்து முழு விவரங்கள் கேட்கப்படும். அது ராணுவக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும். அந்த விவரங்கள், அடுத்து வரும் காலங்களில் ராணுவ நடைமுறைகளாக பின்பற்றப்படும்.