Asianet News TamilAsianet News Tamil

மோடி மீண்டும் பிரதமராவாரா ? அபி நந்தனை குடைந்தெடுத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் !!

தன்னை சிறைபிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தன்னிடம் மோடி மீண்டும் பிரதமராவா ? என அடிக்கடி கேட்டதாகவும்,  இப்போதைக்கு நீங்க ஜெயிச்சிட்டீங்க.. ஆனால் உங்களை நாங்கள் தூங்கவிடமாட்டோம் என எச்சரித்ததாகவும் அபி நந்தன் தெரிவித்துள்ளார். 

abi nandan question by pak soldiers
Author
Delhi, First Published Mar 2, 2019, 11:04 PM IST

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபி நந்தன், உலக நாடுகளின் அழுத்தம், மற்றும் பிரதமர் மோடியின் எச்சரிக்கையை அடுத்த விடுவிக்கப்பட்டார்.

நேற்று இரவு 9.17 க்கு அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் அபி நத்தனை பத்திரிக்கையாளகளுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என ராணுவம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அனுபவங்களை அபி நந்தன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்,

abi nandan question by pak soldiers

அதில் எனக்கு தற்கொலை செய்து கொள்ள கூட நேரமிருந்தது. ஆனால் அது என் நாட்டுக்கு அவமானத்தை தரும். சித்திரவதைகளை அனுபவித்தே உயிரிழப்போம் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.

abi nandan question by pak soldiers

நான் பாகிஸ்தானில்  சிறைபட்டிருப்பது தெரிந்தால் ராணுவம் அதிரடியாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வழக்கமான சித்ரவதைக்கு பதிலாக எனக்கு ராஜமரியாதை கிடைத்தது. பிறகுதான் புரிந்தது இந்தியா எதோ ஒரு வகையில் நெருக்கடி குடுக்கிறது என்பது எனவும் அபி தெரிவித்துள்ளார்.

அன்று மாலை எல்லாரும் என்னை சுற்றி அமர்ந்து கொண்டு பிரதமரை பற்றிய கேள்விகளை எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்தேன். பிறகு அது ராணுவ ரகசியம் இல்லை என்பதாலும் அவரை பற்றி உலகமே அறியும் என்பதாலும் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறினேன். ஒரு சில விஷயங்களை மறைத்தேன். அவர்களின் பிரதான கேள்வியே மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தான். 

abi nandan question by pak soldiers

Say to no war hastag பற்றியும் பாகிஸ்தான்  பிரதமரை இந்திய ஊடகங்கள் புகழ்வதையும் கூறி இந்தியர்களை மிகவும் கேவலமாக விமர்சித்தனர். நான் பாக் ராணுவத்திடம் பிடிபட்ட போது கூட அவ்வளவு வேதனையை அடைந்ததில்லை.

abi nandan question by pak soldiers

மறுநாள் காலை செஞ்சிலுவை சங்கத்திடம் நான் ஒப்படைக்க படபோகிறேன் என தகவலை குடுத்தனர். அப்பொழுது ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் , உன் மோடியிடம் போய் சொல் இன்று நீ ஜெயித்திருக்கலாம் ஆனால் இனிமேல் நீ நிம்மதியாக உறங்க விட மாட்டோம் என்று சொல் என எச்சரிக்கை விடுத்ததையும் அபி நந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios