Asianet News TamilAsianet News Tamil

தமிழருக்காக படபடக்கும் இந்திய நெஞ்சங்கள்.... உயிருடன் திரும்புவாரா அபிநந்தன்..?

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட தமிழரான விமானி அபிநந்தன் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என அத்தனை இந்தியர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Abhinandan returns alive
Author
India, First Published Feb 27, 2019, 7:30 PM IST

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட தமிழரான விமானி அபிநந்தன் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என அத்தனை இந்தியர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Abhinandan returns alive 
சென்னையை சேர்ந்த தமிழரான அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தில் பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்த போது பாகிஸ்தான் வான் எல்லையில் அந்நாட்டு தரைப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு பாட்டிக் கொண்டார். அவர் பிடிபட்டபோது அந்நாட்டு மக்களும், ராணுவத்தினரும் அபிநந்தனை தாக்கிய வீடியோக்களும், அவரது முகத்தில் வடிந்த ரத்தமும் பார்ப்போருக்கு பதபதப்பை ஏற்படுத்தியது. அபிநந்தனின் உயிர் மிஞ்சுமா? என்கிற கேள்வியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பரம எதிரியான பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டுள்ள அபிநந்தனின் நிலை இனி என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் அபிநந்தனை போல பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் சிக்கிய ஒருவர் 1971ம் ஆண்டு தப்பிய சமவம் நடந்துள்ளது. Abhinandan returns alive
 
1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்றது. அப்போது, விமானி திலிப் குமார் போர் விமானத்தில் ஜஃபர்வால் பகுதியில் பறக்கும்போது பாகிஸ்தான் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். பாகிஸ்தான் வீரர்களிடம் அவர் சிக்கிக் கொண்டார்.  ராவல்பிண்டி போர் முகாம் சிறையில் அடைக்கப்பட்டார். பிடிப்பட்டு ஓராண்டாகிய நிலையில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1972ம் ஆண்டு போர் முகாம் சிறையிலிருந்து  மல்வீந்தர் சிங், ஹரிஷ் ஆகிய இருவருடன் சேர்ந்து சிரையிலிருந்து தப்பினர். ஆனால், ஜம்ருத் என்னும் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கினர். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பூட்டோவின் உத்தரவின் பேரில் சிறிது நாட்கள் கழித்து ஃபைசலாபாத் சிறைக்கு மாற்றப்பட்டு, பின்னர் கௌரவமாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர். டிசம்பர் 1, 1972ம் ஆண்டு வாகா எல்லையில் வீர வணக்கத்துடன் வரவேற்கப்பட்டனர்.

Abhinandan returns alive

அவர்களைப்போலவே அபிநந்தனும் விரைவில் விடுவிக்கப்பட்டலாம் எனக் கூறப்படுகிறது. முகத்தில் காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட அபிநந்தன் மாலையில், கெளரவமாக தன்னை பாகிஸ்தான் ராணுவம் நடத்துவதாகவும் டீ சாப்பிட்டுக்ன் கொண்டே பேசிய வீடியோ வெளியாகி பதபதப்பை குறைத்திருக்கிறது. அபிநந்தனை விடுவிக்க இந்த அரசும் முழுமூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேவேளை பதற்றத்தை குறைக்கும் வகையில் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன் வரவேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். எனவே விமானி அபிநந்தன் விரைவில் மீட்கப்பட்டு இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios