இந்திய விமானி அபிநந்தன் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை வரவேற்க வாகா எல்லையில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளனர்.

 

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய அபிநந்தன் ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவார்'' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி இன்று பிற்பகலில், வாகா எல்லை வழியாக இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் தங்க வைக்கப்பட்டுஇருந்த அவரது உடல்நிலை சோதனை செய்யப்பட்டு சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் வாகா எல்லைக்கு அழைத்து வரப்படும் அபிநந்தன்  3 அல்லது 4 மணி அளவில் இந்தியாவை சேர்தடைவார். இந்நிலையில் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் மாலை, தேசிய கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

 
 
அபிநந்தனின் பெற்றோர் இரவே சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்களும் வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க காத்துள்ளனர்.