AASAARAAM BABU 15 MINURES SPEAKS FROM JAIL

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளார் ஆசாரம் பாபு ஆசிரம வாசிகளுடன் தொலைபேசியில் பேசிய பேச்சு வெளியானது,

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆசாரம் பாபு நல்லகாலம் பிறக்கும் எனப் பேசியுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆசிரமத்தில் உள்ள சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் சாமியார் ஆசாரம் பாபுக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்துச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் ஒரு மாதத்துக்கு 80நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்படி அவர் பேசிய 15நிமிடத் தொலைபேசிப் பேச்சு வெளியாகியுள்ளது. அதில், சிறையில் இருப்பது குறுகிய காலந்தான் என்றும், விரைவில் நல்லகாலம் பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்ல காலம் பிறக்கும் என கூறியதிலிருந்து மிக விரைவில் அவர் சிறையில் இருந்து வெளிவருவாரோ என நினைக்க வைத்துள்ளது.