தடைகளை தகர்த்த அசாம் தொலைதூர கிராம மாணவி.. பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை..
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிப்படையாகப் பாராட்டிய நிலையில் அஃப்ருஜாவின் சாதனை கவனம் ஈர்த்துள்ளது..

அசாம் மாநிலம் பார்பெட்டாவில் உள்ள P.H கல்லூரி மாணவி அஃப்ருஜா பேகம் கவுகாத்தி பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். கவுஹாத்தி பல்கலைக்கழகம் (ஜியு) தத்துவத்தில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிப்படையாகப் பாராட்டிய நிலையில் அஃப்ருஜாவின் சாதனை கவனம் ஈர்த்துள்ளது..
பங்காகான் மாவட்டத்தில் உள்ள பண்டாரா சார் கிராமத்தில் வசிக்கும் ஹேபல் அலியின் மகள் அஃப்ருஜா இதுகுறித்து பேசிய போது "எங்கள் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால், வீட்டை விட்டு வெளியேறி கல்லூரியில் வகுப்பு எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. மழைக்காலத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்படும் என்பதால் கல்லூரிக்கு செல்ல முடியாதுலை. அதனால் நான் ஹாஸ்டலில் தங்கினேன்.” என்று தெரிவித்தார். தனது பெற்றோர் தன்னை ஊக்குவித்ததாகவும், இப்போது முதுகலை பட்டப்படிப்பில் சேர விரும்புவதாகவும் அஃப்ருஜா கூறுகிறார்.
அஃப்ருஜா பேகத்தின் தந்தை சிறு தொழில் செய்து வருகிறார். அவர் வசிக்கும் பண்டாரா சார் கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. தொலைதூர கிராமத்தில் இருந்து வந்தாலும் இளங்கலை தேர்வு முடிவுகளில் கவுகாத்தி பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளதில் அஃப்ருஜா பேகம் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கிடையில், AMSU தலைவர் ரெசவுல் கரீம் சர்க்கார் தலைமையிலான குழு அஃப்ருஜாவின் வீட்டிற்குச் சென்று அவரையும் அவரது பெற்றோரையும் மலர்கள், பேனாக்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டியது. AMSU தலைவர் ரெசவுல் கரீம் சர்க்கார் இதுகுறித்து பேசிய போது ."பண்டாரா சார் கிராமம் போன்ற தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த மகள் அஃப்ருஜாவின் செயலால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகுந்த தியாகத்துடனும் கடின உழைப்புடனும் அவர் படித்தார். வரும் நாட்களில் அவர் இன்னும் சிறந்த முடிவுகளை அடைய வாழ்த்துகிறோம், அவர் ஒரு நல்ல குடிமகளாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்திற்கு சேவை செய்ய முடியும்,” என்று தெரிவித்தார்.
பென்டகனை மிஞ்சிய குஜராத் கட்டிடம்! உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!