ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..
தெலங்கானாவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.12 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானாவை சேர்ந்த 30 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது சகோதரியின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.12 லட்சத்தை ஆன்லைன் மோசடியில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்தில் உள்ள பொம்மரெட்டிகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாடித்யா அரவிந்த். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் சங்கரெட்டியில் உள்ள கொல்லகுடம் காலனியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு டெலிகிராம் செயலியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஒரு செய்தி வந்துள்ளது. அந்த செய்தியில் இருந்த இணைப்பை கிளிக் செய்து, வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் சில பணிகளை வெற்றிகரமாக முடித்தார். அதன்படி அவர் முதலில் ரூ ரூ.200 முதலீடு செய்தார். பின்னர் அவருக்கு ரூ.250 கிடைத்துள்ளது. அதன்பின்னர் பெரிய அளவில் லாபம் ஈட்டுவதற்காக, அரவிந்த் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்தார். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் வெற்றிகரமாக முடித்தாலும், ஆன்லைன் மோசடி செய்பவர்களிடமிருந்து அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : 2 ஆண்குறிளுடன் ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
தனது சகோதரியின் திருமணத்தை நடத்த ரூ.12 லட்சம் சேமித்து வைத்திருந்தார். எனினும் டெலிகிராம் மெசஞ்சர் மூலம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மோசடி செய்தவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ஆசைவார்த்தை கூறி மருத்துவ மாணவி பலமுறை பலாத்காரம்.. கருவை கலைத்த டாக்டர்.. காவல் நிலையத்தில் கதறும் இளம்பெண்