ஆசைவார்த்தை கூறி மருத்துவ மாணவி பலமுறை பலாத்காரம்.. கருவை கலைத்த டாக்டர்.. காவல் நிலையத்தில் கதறும் இளம்பெண்

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில், அந்த இளம்பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். 

Medical college student rape ..case filed against Doctor

சமூகவலைதளம் மூலம் பழகி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்து கருக்கலைப்பு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில், அந்த இளம்பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் தமிழ்செல்வன் என்பவருடன்  சமூகவலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அடிக்க இருவரும் வெளியில் சென்று வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கர்ப்பமானதை கட்டாயப்படுத்தி கலைத்ததாகவும் 

திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருப்பதாகவும் எனவே கர்ப்பத்தை கலைத்துவிட வேண்டும் என்று தமிழ்செல்வன் என்னை கட்டாயப்படுத்தி கலைத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் என்னிடம் பேசுவதையும், வீட்டிற்கு வருவதையும் தவிர்த்துள்ளார். எனவே தமிழ்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios