ஓடும் ரயிலில் சக பயணியை மதுபாட்டிலால் குத்திய நபர்.. அதிர்ச்சி சம்பவம்

கேரளவில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர், சக பயனியை மதுபாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A person stabbed a fellow passenger with a bottle in a moving train.. Shocking incident

அஜ்மீர் சென்ற மரு சாகர் விரைவு ரயிலில் சக பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதலில் பரப்பனங்காடியை சேர்ந்த தேவதாசன் என்பவர் படுகாயம் அடைந்தார். கேரள மாநிலம் ஷோரனூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎஃப்) குருவாயூரில் ஜியாத்தை கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணியளவில் ஷோரனூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 

மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்

இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்துக்கு வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலில் பெண் பயணிகளிடம் ஜியாத் என்ற நபர் தகாத முறையில் நடந்து கொண்டது குறித்து தேவதாசனும் மற்ற பயணிகளும் அவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருக்ககட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜியாத், ரயில் ஷோரனூர் ஸ்டேஷனுக்கு வந்தபோது,  மது தேவதாசனை பாட்டிலால் தாக்கினார்.

இந்த தாக்குதலில் தேவதாசனுக்கு கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.  மேலும் அவருடன் சண்டையிட்டதில் ஜியாதுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் வாணியம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குல் நடத்திய ஜியாத்தை இதுவரை பார்த்ததில்லை என தேவதாசன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளி குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios