நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் (ஏ1 102), பயணி ஒருவரின் இருக்கை அருகே குடிபோதையில் இருந்த ஒரு நபர் சிறுநீர் கழித்து உள்ளார்.

குடி போதையில் இருந்த அந்த நபர், போதையில் செய்வது அறியாது சக பயணியின் இருக்கை அருகே சிறுநீர் கழித்து சென்ற சம்பவம், விமானத்தில் பயணித்த அனைவரையும் முகம் சுழிக்க நேரிட்டது.

பின்னர், டெல்லி வந்தடைந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கிய அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமால், ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் அப்படியே விட்டு விட்டனர். இதனால் கோபம் அடைந்த  பாதிக்கப்பட்ட பயணியின் மகள் இந்திராணி கோஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு, டுவிட்டரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், மத்திய சிவில் விமானப்போக்குவரத்துறை மந்திரி ஜெயந்த் சின்ஹாவுக்கும் டேக் செய்து புகார் தெரிவித்து இருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா, "இந்திராணி கோஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், விமானப்போக்குவரத்து துறைக்கும்  கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும் இந்த சம்பவத்திற்கு, தான் வருத்தப்படுவதாகவும் வேதனை தெரிவிப்பதாகவும் அவர் ட்வீட் செய்து உள்ளார்.