பல ஆண்டுகளாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த நபரின் X-Ray ஸ்கேனை பாரத்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சில நேரங்களில் மிகவும் சாதாரண உடல்நலப் பிரச்சினைகள் ஒரு கொடிய நிலையைக் குறிக்கலாம். அந்த வகையில் ஒரு நோயாளியின் தொடர்ச்சியான இருமல் மிகவும் தீவிரமான பிரச்சனை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த நபருக்கு மருத்துவர்கள் செய்த எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனையில் இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. ஆம். அவர் உடலில் இருந்தது ஒட்டுண்ணி மற்றும் நாடாப்புழுக்கள் என்று தெரியவந்தது. மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில் ஸ்கேன் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நாடாப்புழு இனத்தின் லார்வாக்கள் தசைகள் அல்லது மூளை திசுக்களில் நுழையும் போது சிஸ்டிசெர்கோசிஸ் எனப்படும் இந்த நிலை ஏற்படுகிறது. அசுத்தமான உணவை, குறிப்பாக பெரும்பாலும் இறைச்சியை ஒருவர் உட்கொள்ளும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக லார்வாக்கள் தோல் வழியாக உணரக்கூடிய கடினமான நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றன என்றும்,. புழுக்கள் விரைவாக இறப்பதால் இது பொதுவாக பாதிப்பில்லாதது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இறந்த புழுக்களில் இருக்கும் நீர்க்கட்டிகள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். நீர்க்கட்டி கண்களை பாதிக்கலாம் என்றும், அவை மங்கலான பார்வையை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : எல்லாம் உஷாரா இருங்க.. மோச்சா புயல் வருது.. இந்திய வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை.!!

புழு தொல்லை காரணமாக எப்படி இருமல் வந்தது?

நுரையீரலில் நீர்க்கட்டிகள் இணைக்கப்படும்போது மார்பு வலி மற்றும் இருமல் ஏற்படலாம். மேலும் அவை முதுகுத் தண்டுவடத்திலோ அல்லது மூளையிலோ ஏற்பட்டால், அவை நியூரோசிஸ்டிசிரோசிஸை ஏற்படுத்தலாம். நாடாப்புழு நோய்த்தொற்றின் மிகத் தீவிரமான வடிவம் வலிப்பு நோயை ஏற்படுத்தலாம்.

நாடாப்புழு நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன?

  • பசியிழப்பு
  • பசி
  • குமட்டல்
  • சோர்வு
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்றுப் பிடிப்புகள்

இவை தோலின் கீழ் கட்டிகளாகவும் தோன்றலாம். அவை உள் உறுப்புகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். நாடாப்புழுவின் முட்டைகளால் ஏற்படும் ஆரம்ப தொற்றுக்கு பல ஆண்டுகள் அல்லது மாதங்களுக்குப் பிறகுதான் பொதுவாக நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

இதையும் படிங்க : கர்நாடக தேர்தல் 2023 : இந்த நாட்களில் மதுபான கடைகள் இயங்காது.. வெளியான முக்கிய அறிவிப்பு..