கர்நாடகாவில் இன்று மாலை 5 மணி முதல் மதுபான கடைகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று மாலை 5 மணி முதல் மதுபான கடைகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் பிரதாப் ரெட்டி இந்த தடை உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில்” நகரில் உள்ள கடைகளில் மதுபானம், மது, அரக்கு அல்லது மொத்த அல்லது சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் விற்பனை, நுகர்வு, கொள்முதல் மற்றும் சேமிப்பு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் மங்களூருவில் CL9 உரிமத்துடன் (புதுப்பிப்பு அறை (பார்) உரிமம்) மது விற்கும் அனைத்து இடங்களும் மூடப்பட்டிருக்கும், மேலும் உணவு விநியோகமும் இருக்காது.

பெங்களூருவில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மது பார்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், மதுக்கடைகள், கடைகள் அல்லது வேறு ஏதேனும் பொது அல்லது தனியார் இடங்களில் உள்ள மதுபான கடைகள், மே 8 மாலை 5 மணி முதல் மே 10 நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும். 10 மற்றும் மே 13 காலை 6 மணி முதல் மே 13 நள்ளிரவு வரை மதுபான கடைகள் இயங்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்

கர்நாடக மது வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ் ஹெக்டே இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் 12,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிஎல்9, 6 (நட்சத்திர ஓட்டல்கள்), 2 (சில்லறை விற்பனை) உரிமங்களுடன் உள்ளன. 'பார்கள் மற்றும் உணவகங்களில், ஒன்று மற்றொன்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களால் உணவையும் வழங்க முடியாது. தேர்தல் நேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அமலுக்கு வரும் மதுவிலக்கை திருமணங்களுக்கு உணவு வழங்கும் ஹோட்டல்களும் கடைப்பிடிப்பார்கள். பெங்களூரில் உள்ள உத்தரவு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்." என்று கூறினார். இந்தத் தடையானது சமூக விரோதக் குழுக்களை வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கம் வகையில் அமலுக்கு வர உள்ளது. 

கடந்தமார்ச் 29-ம்தேதிகர்நாடகதேர்தல்அட்டவணையைஇந்தியதேர்தல்ஆணையம்வெளியிட்டது. 224 தொகுதிகளைகொண்டசட்டசபைக்குமே 10-ம்தேதிவாக்குப்பதிவும், மே 13-ம்தேதிவாக்குஎண்ணிக்கையும்நடைபெறஉள்ளது. ஆட்சியைதக்கவைக்கவேண்டும்என்றுபாஜகவும், மீண்டும்ஆட்சியைகைப்பற்றவேண்டும்என்றுகாங்கிரஸ்கட்சியும்தீவிரமாகதேர்தல்பணிகளில்ஈடுபட்டுவருகின்றன. மேலும்மதச்சார்பற்றஜனதாதளம்கட்சியும்களத்தில்உள்ளதால்அங்குமும்முனைபோட்டிநிலவுகிறது. தேர்தல்களம்சூடுபிடித்துள்ளது. இன்று மாலை 5 மணியுடன் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நீட் தேர்வை போல, இனி +2 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்பார்களா? நாராயணன் திருப்பதி கேள்வி..