Bangalore Traffic: டிராபிக் ஜாம்! 45 நிமிடங்கள் ஓடிவந்து அறுவைசிகிச்சை செய்து நோயாளி உயிர் காத்த மருத்துவர்
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நோயாளிக்கு அறுவைசிகிச்சை சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மருத்துவர், 45 நிமிடங்கள் ஓடிச் சென்று மருத்துவமனையை அடைந்து அறுவை சிகிச்சை செய்து நோயாளி உயிரைக் காத்துள்ளார்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நோயாளிக்கு அறுவைசிகிச்சை சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்த மருத்துவர், 45 நிமிடங்கள் ஓடிச் சென்று மருத்துவமனையை அடைந்து அறுவை சிகிச்சை செய்து நோயாளி உயிரைக் காத்துள்ளார்.
பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் பணியாற்றும் குடலியக்கஅறுவை சிகிச்சை நிபுரணர் மருத்துவர் கோவிந்த் நந்தகுமார்தான் இந்த புத்திசாலித்தனமான முடிவை எடுத்து நோயாளி உயிரைக் காத்துள்ளார்.
கொரோனாவில் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசு குழப்பமான பதில்
பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசலும் சேர்ந்து வந்துவிடும். கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பெயரெடுத்த அந்த நகரில் காலை, மாலை நேரத்தில் குறித்த நேரத்துக்குள் ஒரு இடத்தை அடைவது கடினம். ஆதலால் திட்டமிட்டு முன்கூட்டியே கிளம்புவது அவசியமாகும்.
அப்படித்தான் மருத்துவர் கோவிந்த் நந்தகுமாரும் கடந்த மாதம் 30ம் தேதி நடக்க இருந்த ஒரு அறுவை சிகிச்சைக்காக வீட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட்டுள்ளார். இருப்பினும், பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்டநேராமாகப் போராடியுள்ளார்.
மருத்துவமனையில் ஒருநோயாளி ஒருவருக்கு அவசரமாக லேப்ரோஸ்கோபி மூலம் கால்பிளாடர் அறுவைசிகிச்சையை மருத்துவர் நந்தகுமார் செய்ய வேண்டியது இருந்தது. மருத்துவமனை நிர்வாகமும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட்டு மருத்துவர் நந்தகுமார் வருகைக்காக தயாராகஇருந்தனர்.
ஆனால், சர்ஜாபூர்-மாரதாலி பகுதி போக்குவரத்து நெரிசலில் நந்தகுமார் சிகிக்கொண்டார். நீண்டநேரமாகியும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. அந்தஇடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும் , 3 கிலோமீட்டர் ஆகும் என கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டது.
சூழலையும், நோயாளியின் உடல்நிலையையும் உணர்ந்த, மருத்துவர் நந்தகுமார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தனது காரில் இருந்து இறங்கி, அங்கிருந்து மருத்துவமனைக்கு ஓடத் தொடங்கினார்.
45 நிமிடங்கள் ஓடி மருத்துவமனையை அடைந்த நந்தகுமார், அறுவை சிகிச்சை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு மயக்கநிலையில் வைக்கப்பட்டிருந்தார். உடனடியாக தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு, அறுவைசிகிச்சை செய்த நந்தகுமாரால், நோயாளி தற்போது குணமடைந்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானச் செலவு ரூ.1800 கோடியாக அதிகரிக்கும்: அறக்கட்டளை தகவல்
தனது அனுபவம் குறித்துஆங்கில நாளேடு ஒன்றுக்கு மருத்துவர் நந்தகுமார் அளித்த பேட்டியில் “ அறுவைசிசிக்சைச் செல்வதற்காக முன்கூட்டியே வீட்டிலிருந்து காரில் புறப்பட்டும் சர்ஜாபூர் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது. நீண்டநேரமாகியும் நெரிசல் சரியாகவில்லை. அங்கிருந்து மருத்துவமனைக்கு 45 நிமிடங்கள் ஆகும் என கூகுள் மேப்பில் பார்த்தேன்.
என்னுடைய குழுவினர் அறுவைசிகிச்சைக்காக தயாராக இருந்தார்கள். போக்குவரத்து நெரிசல் சரியாக மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்குச்செல்ல முடியாது என்பதால், காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு ஓடினேன். சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது, நோயாளியும் குணமடைந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்