ram temple: ayodhya: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானச் செலவு ரூ.1800 கோடியாக அதிகரிக்கும்: அறக்கட்டளை தகவல்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானச் செலவு ரூ.1,800 கோடியாக அதிகரிக்கும் என்று கட்டுமானத்தின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானச் செலவு ரூ.1,800 கோடியாக அதிகரிக்கும் என்று கட்டுமானத்தின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரம் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கூட்டம் நேற்று பைசாபாத்தில் நடந்தது. இதில் இந்து மடாதிபதிகள், சாதுக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு: 144 தடை உத்தரவு;வழக்கின் விவரம் என்ன?
இந்தக் கூட்டத்துக்குப்பின் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோயில் வளாகத்தில் சிலைகள் வைக்கவும், இந்து மாடாதிபதிகளுக்கு இடம் வழங்குவது என ஒரு மனதாக அறக்கட்டளை உறுப்பினர்களால் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், கோயில் கட்டமானச் செலவு ரூ.1800 கோடியை எட்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டை புரட்டிப்போட்ட மேக வெடிப்பு... வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்கள்!!
நீண்ட ஆலோசனைக்குப்பின், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆலோசனை, விவாதத்துக்குப்பின் அறக்கட்டளையின் விதிகள், சட்டங்கள் இறுதி செய்யப்பட்டன.இந்த கூட்டத்தில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கட்டுமானக் குழு தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, தலைவர் மகந்த் நித்யா கோபால் தாஸ், பொருளாளர் கோவிந்த் தேவ்கிரி, உறுப்பினர்கள் என 15 பேர் பங்கேற்றனர்.
ராமர் கோயில் கட்டுமானம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடியும் என்று எதிர்பார்கிறோம். வெள்ளை பளிங்கு கற்கள் மூலம் ராமர் சிலையை வடிவமைக்க முடிவு எடுத்துள்ளோம். ராமயன காலத்தில் வாழ்ந்த முக்கிய நபர்கள் குறித்த சிலையும் கோயில் வளாகத்தில் வைக்கப்படும். 2024ம் ஆண்டு மகரசங்கராதி பண்டிகைக்குள் ராமர் கோயிலில் மூலஸ்தானத்தில் ராமர் வைக்கப்படுவார்
இதே நாளில் விவேகானந்தர் நடத்திய புகழ்பெற்ற சிகாகோ உரை.. பிரதமர் மோடி பகிர்ந்த கொண்ட சுவாரஸ்ய தகவல்
இவ்வாறு சம்பத் ராய் தெரிவித்தார்