இதே நாளில் விவேகானந்தர் நடத்திய புகழ்பெற்ற சிகாகோ உரை.. பிரதமர் மோடி பகிர்ந்த கொண்ட சுவாரஸ்ய தகவல்
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இதே நாளில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற உரையை ஆற்றினார். மேற்கத்திய நாடுகளுக்கு விவேகானந்தர் எவ்வாறு ”அத்வைதம் வேதாந்தம்” பற்றி விளக்கினார் என்பது குறித்து 1985 ஆம் ஆண்டு புனேவில் பேசிய பிரதமர் மோடியின் உரை தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இதே நாளில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற உரையை ஆற்றினார். மேற்கத்திய நாடுகளுக்கு விவேகானந்தர் எவ்வாறு ”அத்வைதம் வேதாந்தம்” பற்றி விளக்கினார் என்பது குறித்து 1985 ஆம் ஆண்டு புனேவில் பேசிய பிரதமர் மோடியின் உரை தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் சுவாமி விவேகாந்தர் மீது மோடி கொண்ட பற்று மற்றும் அர்பணிப்பு குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை Modi Archive ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதன்படி 1991 ஆம் தேதி பாஜகவினால் நடத்தப்பட்ட ஏக்தா யாத்திரை அப்போதைய பாஜகவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியால் தொடங்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து 45 நாட்கள் நடைப்பெறும் இந்த ஏக்தா யாத்திரை ஏற்பாடு செய்யும் மிக பெரிய பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, ஏக்தா யாத்திரை தொடங்கியது. இதில் பாஜக முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
மேலும் படிக்க:rahul gandhi: amit shah: bjp: வரலாற்றை முதலில் படிங்க ராகுல் காந்தி : அமித் ஷா தாக்கு
சுவாமி விவேகானந்தர் இளம் மோடியின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணிக்க தூண்டியுள்ளார். ராமகிருஷ்ணா மிஷனில் சாதுக்கள் மற்றும் துறவிகளுடன் வாழ்ந்த பிரதமர் மோடி, அவர் தங்கியிருந்த காலத்தில், விவேகானந்தரின் அறையில் தனது அனைத்து நேரத்தையும் செலவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை தனது நாட்குறிப்பில் சேகரித்து வந்துள்ளார். மேலும் அவரது தத்துவங்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்து மோடி தொடர்ந்து இளைஞர்களுடன் விவாதித்து வந்துள்ளார். மேலும் 1993 ஆம் ஆண்டு விவேகானந்தரின் சிகாகோ உரை நூற்றாண்டு விழாவுக்காக வாஷிங்டனில் நடைபெற்ற குளோபல் விஷன் 2000 மாநாட்டில் கலந்துக் கொள்ள மோடி அழைக்கப்பட்டார்.
மேலும் படிக்க:நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்.. மத்திய - மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..
இதில் சுமார் 60 நாடுகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். மாநாட்டில் இளைஞர்கள் இந்தியக் கொடிகளை பறக்கவிட்டு, வாத்தியக் குழுவுடன் அணிவகுத்து மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுக்குறித்த குறிப்புகளும் பகிரப்பட்டுள்ளன. மேலும் தேசத்தின் பெருமையை எழுப்ப மோடி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளில் சுவாமி விவேகானந்தர் ஒரு தத்துவ தாக்கமாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வெளிநாட்டு உரையில் அவர் விவேகானந்தரின் தத்துவங்கள் குறித்து பேசினார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராக இருந்த பிரதமர் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரைக்கு நினைவு கூரும் வகையில், குஜராத் முழுவதும் மாபெரும் யாத்திரையை மேற்கொண்டார். இந்நிலையில் 1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தலைசிறந்த உரையை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். 1893-ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது. தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதில் “செப்டம்பர் 11-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.