நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும்.. மத்திய - மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..
அகமதாபாத்தில் நடந்து வரும் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும் போது, அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசு முன்னேறி வருகிறது'' என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற ஒரே நேரத்தில் பலமுனைகளில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அறிவியல், தொழில்நூட்பம் தொடர்பான நமது ஆராய்ச்சியை உள்ளூர் அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்பு ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் படிக்க:congress: காங்கிரஸில் தீராத குழப்பம்!தலைவர் தேர்தலை நியாயமாக,வெளிப்படையாக நடத்துங்க! 5 எம்.பி.க்கள் போர்க்கொடி
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2015 ஆம் ஆண்டு 81 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46 வது இடத்தில் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் பேசினார். இந்த மாநாட்டில், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்கள் இந்த மாநாட்டை தவிர்த்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில் இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கபடவுள்ளது. அதாவது நாட்டில் எதிர்கால பொருளாதாரம், ஆரோக்கியம் - அனைவருக்கும் டிஜிட்டல் ஹெல்த் கேர்; ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் 2030க்குள் தனியார் துறை முதலீட்டை இரட்டிப்பாக்குதல்; விவசாயம் - விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப தலையீடுகள்; குடிநீரை உற்பத்தி செய்வதற்கான புது கண்டுபிடிப்புகள், சுத்தமான ஆற்றல்; கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஆழ்கடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பேசப்படவுள்ளது.
மேலும் படிக்க:narendra modi:நேருவைப்போல் அல்ல! தனது பாரம்பரியத்தை பற்றி பெருமைப்படும் பிரதமர் மோடிதான் ! ஆதித்யநாத் புகழாரம்
மாநாட்டின் தொடக்க விழாவில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.