திருச்சானூர் பத்மாவதி கோவிலுக்கு தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்.. எவ்வளவு மதிப்பு தெரியுமா.?
திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க:அடுத்தடுத்து காவு வாங்கும் கோவை மேம்பாலம்...! உயிர் பலி வாங்க காரணம் என்ன..?அதிர்ச்சியூட்டம் தகவல்
திருமலை திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வேண்டிக்கொண்டு பல்வேறு காணிக்கைகளை செய்வதுண்டு. அந்த வகையில், ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா பக்தர் ஒருவர், தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
85 கிராம் எடை கொண்ட இந்த தங்க பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்கபாதங்களை கோவில் கூடுதல் அதிகாரி பிரபாகர் ரெட்டி, அர்ச்சகர் பாபுசுவாமி, கண்காணிப்பாளர் சேஷகிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க:பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்