மகாராஷ்டிராவில் இன்று மேலும் 9615 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 357117ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்துவிட்டது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா தான் உள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்கள் தான் கொரோனா பாதிப்பில் டாப்பில் உள்ளன. கடந்த சில தினங்களாக கர்நாடகாவிலும் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 5007 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், தலைநகர் சென்னையில் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக இருந்த நிலையில், கடந்த 3 வாரமாக சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 65116 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 6785 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,99,749ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 9615 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 3,57,117ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 278 பேர் உயிரிழந்தனர். 

மேலும் மகாராஷ்டிராவில் இன்று 5714 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 1,99,967 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தினமும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதியாகிவருகின்றன. கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்ததில் இருந்தே மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது.