48 மணிநேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை.. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சோகம்..
ஆந்திராவில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 11 மற்றும் 12-ம் வகுப்பில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். 11ம் வகுப்பில் 61 சதவீத மாணவிகளும், தேர்ச்சியும், 12ம் வகுப்பில் 72 சதவீதமும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பி தருண் (17) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11-ம் வகுப்பில் பெரும்பாலான பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்ததாகவும், அதனால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; கணவன், மனைவி கைது
அதே போல் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரிநாதபுரத்தில் 16 வயது மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அகிலஸ்ரீ என்ற மாணவி 11-ம் வகுப்பில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் விசாகப்பட்டினத்தின் கஞ்சரபாலம் பகுதியில் வசிக்கும் 18 வயது மாணவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் 12-ம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டனர். ஒரு மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் ஒரு மாணவர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு 17 வயது மாணவர் அனகாபள்ளியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 11-ம் வகுப்பு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தற்கொலை, அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பல்வேறு வளாகங்களில் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மாணவர்கள் தற்கொலை நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்திருண்நார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், நமது கல்வி நிறுவனங்கள் எங்கே தவறாகப் போகிறது என்று யோசிப்பதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க : அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லுமா? செல்லாதா? சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!