அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லுமா? செல்லாதா? சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Theni MP ravindranath Case against election victory.. Court adjourned judgment

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Theni MP ravindranath Case against election victory.. Court adjourned judgment

அவர் தாக்கல் செய்த மனுவில்;- ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். ஆகையால், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதனிடையே தேர்தல் குறித்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு எம்.பி. ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  எம்.பி. ரவீந்திரநாத் எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

Theni MP ravindranath Case against election victory.. Court adjourned judgment

அதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியங்களை அளித்தார். அதேபோல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் தனது வாதங்களை முன்வைத்தனர். அனைத்து வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios