குஜராத் மாநிலம் சூரத்தில் இருக்கும் தற்காப்பு கலை வல்லுனர்கள் ஒன்றுசேர்ந்து கின்னஸ் உலக சாதனை புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தற்காப்புக் கலை வல்லுநர்கள் 9பேர் பங்கேற்றனர். 4 முதல் 6 அங்குலம் நீளம் கொண்ட ஆணி படுக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது ஒருவர் படுத்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஒருவர் மீது ஒருவர் ஆணிப்படுக்கை மேல் படுத்த பிறகு மேலே இருப்பவர் மீது ஒரு கல் வைக்கப்படுகிறது. அதை ஒருவர் சுத்தியலால் ஓங்கி அடித்து உடைக்கிறார். இந்த நிகழ்வு பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.

இந்த தற்காப்புக் கலை வல்லுநர்கள் குழு அவ்வப்போது பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதற்குமுன் இதே குழுவைச் சேர்ந்த 8 பேர் ஆணிப்படுக்கையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து நிகழ்த்திய சாதனையே பெரிதாக இருந்தது. தற்போது அவர்களே தங்கள் முந்தைய சாதனையை முறியடித்து இருக்கின்றனர். 

இந்தக் குழுவில் இருக்கும் கிராடி என்பவர் பழைய இரும்பு கம்பிகளை வளைத்து தனது பின் கழுத்துப் பகுதியில் வைத்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தரா நீங்க..? உங்களுக்கு தான் இந்த நியூஸ்..!