பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..
ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் தலைக்கீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் தலைக்கீழாக கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குலு மாவட்டத்தில் பஞ்சார் பகுதியில் கியாகி அருகே நேற்றிரவு 8.30 மணியளவில் 17 பேருடன் சென்றுக்கொண்டிருந்த டெம்போ வாகனம், திடீரென்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் வாரணாசி ஐஐடி மாணவர்கள் மூவர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க:tirumala tirupati:மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்
விபத்தில் காயமடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக பஞ்சார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக குலு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாள காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று குலு மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கபட்டன.. காலாண்டு தேர்வு தொடங்கியது.
இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதனிடையே பஞ்சார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ இரவு முழுவதும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக கனமழை காரணமாக ட்ரைண்ட் மலைப்பகுதியில் சிக்கி தவித்த 83 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.