Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு: அமர்நாத் பக்தர்கள் 7 பேர் பலி...

7 Amarnath Yatra Pilgrims Killed In Terror Attack In Jammu And Kashmir Anantnag
 7 Amarnath Yatra Pilgrims Killed In Terror Attack In Jammu And Kashmir Anantnag
Author
First Published Jul 11, 2017, 8:16 AM IST


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்காக் மாவட்டத்தில் அமர்நாத் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள்,11 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. முனிர்கான் கூறுகையில், “ அனந்த்காக் மாவட்டம், படேன்கூ மற்றும் கனாபால் பகுதியில் போலீசாரையும் குறிவைத்து தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி வந்தனர். இதற்கு போலீசார் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது.

இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டைஇரவு வரை நீடித்தது. அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடந்தபோது, இரவு 8 மணி அளவில் பக்தர்கள் பயணித்த பஸ் இடையே புகுந்தது. இதில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் மீது குண்டு பாய்ந்தது. இதில்  சம்பவ இடத்திலேயே 6 பக்தர்கள் பலியானார்கள், 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.

 7 Amarnath Yatra Pilgrims Killed In Terror Attack In Jammu And Kashmir Anantnag

இதற்கிடையே அமர்நாத் பக்தர்கள் பயணித்த பஸ், புனித தல வாரியத்தில் பதிவுசெய்யப்படாத பஸ் எனத் தெரியவந்துள்ளது. இரவு 7 மணிக்கு பின், அந்த பாதையில் பஸ்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பஸ் ஓட்டுநர் தவறாக அந்த பாதையில் வந்துள்ளார். அந்த பஸ் ராணுவத்தின் பாதுகாப்பு வாகனமும் இல்லை, பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் பஸ்ஸும் இல்லை என பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து துணை ராணுவப்படையினர் 90, 40 பட்டாலியன் பிரிவினர் அங்கு விரைந்துள்ளனர்.

காஷ்மீர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த பக்தர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் இருந்து அமர்நாத் தரிசனத்துக்காக வந்தவர்கள் என்றும் தரிசனத்தை  முடித்து திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத்தெரியவந்தது. இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 5 பேர் பெண்கள் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் அனந்த்காக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த அறிந்த பிரதமர் மோடி டுவிட்டரில் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “ அமைதியாக அமர்நாத் சென்று திரும்பிய பக்தர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல். இந்த தாக்குதலுக்கு ஒவ்வொருவரும் கடுமையாக கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios