ஆந்திராவில் திருமண விழாவிற்கு சென்ற போது வேன் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம் பேனுகொண்டா மண்டல் மாவட்டத்தில் சத்தாருபள்ளி கிராமம் உள்ளது. திருமண விழாவிற்காக வேன் ஒன்றில் 22 பேர் சென்றனர். சத்தாருபள்ளி என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

சிலர் மேல்சிகிச்சைக்காக பேனுகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் தெரிய வரவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.