இந்திய பொருளாதாரத்தை வடிவமைத்த 5 வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்கள்.. ஓர் பார்வை..
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த பல முக்கிய பட்ஜெட்களை நாடு கண்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு அவர் இன்று 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 வரை நடைபெற உள்ளது.
1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தபோது, மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பட்ஜெட்டாக கருதப்படுகிறது. அதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த பல முக்கிய பட்ஜெட்களை நாடு கண்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது யூஸ் பண்ணிக்கோங்க!
1957-58
1957-58 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை டி.டி.கிருஷ்ணமாச்சாரி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் செல்வ வரி உட்பட அற்புதமான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் வரிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில் தனிநபர் சொத்துக்களின் மொத்த மதிப்பில் இந்த வரி விதிக்கப்பட்டது. மேலும் இந்த வரி பல்வேறு வடிவங்களில் இந்திய வரி முறையின் ஒரு பகுதியாக இருந்தது. செல்வ வரி 2015-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
1991-92
மன்மோகன் சிங் தாக்கல் செய்த 1991 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட், அந்த காலக்கட்டத்தில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டது. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்திருத்த தனது நிபுணத்துவத்தை பயன்படுத்தினார். இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை மறுசீரமைப்பதற்காக திட்டக் கமிஷனின் தலைவராகவும், தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த அவர் தனது அனுபவத்தின் மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட்டில் சுங்க வரியை 220 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக குறைத்தார். இது இந்திய வர்த்தகத்தை உலகளவில் போட்டிபோடும் அளவுக்கு மாற்றியது. பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் கீழ், புதிய தாராளமயக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார், அரசாங்கக் கட்டுப்பாட்டைக் குறைத்து பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தினார்.
மன் மோகன் சிங்கின் இந்த மைல்கல் பட்ஜெட் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, உலகளவில் இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தியதுடன் இந்த பட்ஜெட் வெளிநாட்டு முதலீட்டையும் ஈர்த்தது, பொருளாதார நம்பிக்கையை அதிகரித்தது, மேலும் இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாக மாற வழி வகுத்தது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்! நம்ம தமிழ் மொழி எந்த இடம் தெரியுமா?
1997-98
நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங்கின் கீழ் பணியாற்றிய ப சிதம்பரம், 1997 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தபோது தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் அவர் பட்ஜெட்டில் தனது பொருளாதார மற்றும் நிதி நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார். நிபுணர்களால் "கனவு பட்ஜெட்" என்று பெயரிடப்பட்ட பட்ஜெட், தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியைக் குறைத்தது.. ப சிதம்பரம் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரிகளில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை அறிமுகப்படுத்தினார், அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைத்தார். இந்த நடவடிக்கை, கூடுதல் கட்டணங்கள் மற்றும் குறைக்கப்பட்ட ராயல்டி விகிதங்கள் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டது, வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளித்ததுடன் இந்தியாவின் சிறந்த பட்ஜெட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2000-01
அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் யஷ்வந்த் சின்ஹா ஒரு முக்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரின் பட்ஜெட், கணினி உட்பட 21 பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இது தொழில்துறையில் ஏற்றத்திற்கு வழிவகுத்தது, இந்தியாவை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மையமாக மாற்றியது.
2016-17
2017-18ஆம் ஆண்டு அருண் ஜெட்லியின் பட்ஜெட், 92 ஆண்டுகால பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். இது வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் என்ற முறையில், அருண் ஜேட்லி இந்த செயல்முறையை நெறிப்படுத்தினார், ஒரு ஒருங்கிணைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார், பின்னர் அது நிலையான நடைமுறையாக மாறிவிட்டது.
- 2024 Budget Highlights Tamil
- 2024-25 Budget
- Asianet News Budget News
- Budget 2024 Expectations
- Budget 2024 Tamil News
- Budget 2024 live
- Budget 2024 live updates
- Budget 2024 news
- Budget News in Tamil
- Budget Session
- Budget presentation 2024
- Finance Minister Nirmala Sitharaman
- India Budget 2024
- July 2024
- Modi 3.0 government
- Nirmala Sitharaman speech
- Parliament Budget Session 2024
- Union Budget
- Union Budget 2024
- Union Budget News Tamil
- Union Budget date 2024