MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது யூஸ் பண்ணிக்கோங்க!

இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது யூஸ் பண்ணிக்கோங்க!

ரயிலில் பயணம் செய்யும்போது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சேவைகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

1 Min read
Author : SG Balan
| Updated : Jul 22 2024, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க இந்திய ரயில்வே எப்போதும் முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்யும் போது எந்த பிரச்சனையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக இந்திய ரயில்வே பல சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

27

ரயிலில் பயணம் செய்யும்போது, இரவு நேரத்தில் இறங்கும் ஸ்டேஷன் வருகிறது என்றால், எப்போது ஸ்டேஷன் வரும் எனக் காத்திருந்து, இரவு முழுவதும் விழித்திருப்பார்கள்.

37

இத்தகைய பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே ஒரு ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே விதிகளின்படி, இரவில் இறங்க வேண்டிய பயணிகளை, ஸ்டேஷன் வருவதற்கு முன் எழுப்புவதும் டிக்கெட் பரிசோதகரின் பொறுப்பாகும்.

47

ரயில்வே ஊழியர்கள் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறினால் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இந்த விதி ஏசி பயணிகளுக்கு மட்டும் பொருந்தும்.

57

ஆனால், முன்பதிவு அல்லாத மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு இந்த வசதி கிடையாது. ராஜ்தானி, தேஜாஸ், துரந்தோ அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி கோச்சில் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

67

இந்த ரயில்களில், ஏசி பெட்டிகளில் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் இறங்கவேண்டியது இருந்தால், 15 நிமிடங்களுக்கு முன் அவர்களை எழுப்ப வேண்டிய பொறுப்பு டிக்கெட் பரிசோதகரிடம் உள்ளது. இந்திய ரயில்வே இதற்காக ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகருக்கும் 'வேக் அப்' மெமோவை வழங்குகிறது.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரிபார்க்கும்போதே பயணிகள் எந்த நேரத்தில் எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வார். அதன்படி, மெமோவில் பயணிகளின் பெயர் மற்றும் இருக்கை எண்ணை எழுதுவார்.

77

பயணிகள் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தனது உதவியாளரை அனுப்பி, பயணிகளிடம் வரவிருக்கும் ரயில் நிலையம் பற்றித் தெரிவிக்க வேண்டும். இதில் யாராவது அலட்சியம் காட்டினால், அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
இந்திய இரயில்வே
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
Recommended image2
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Recommended image3
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved