Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 3 வாரங்களில் 4 லட்சம் திருமணங்கள்.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கப்போகும் டெல்லி மக்கள்..

அடுத்த 3 வாரங்களில்  4 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் புதிய பிரச்சனையாக மாறி உள்ளது.

4 lakhs marriages in next 3 weeks delhi traffic nightmare begins Rya
Author
First Published Nov 24, 2023, 12:53 PM IST | Last Updated Nov 24, 2023, 12:53 PM IST

நவம்பர் 23 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று வாரங்களில் டெல்லியில் கிட்டத்தட்ட 4 லட்சம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், டெல்லில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது. போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, விகாஸ் மார்க், NH-8, மாயாபுரி, துவாரகா, தௌலா குவான், கர்கர்தூமா, சத்தர்பூர், சர்தார் படேல் மார்க், ஆனந்த் விஹார், பஞ்சாபி பாக், சுபாஷ் நகர், திலக் நகர் மற்றும் ஜிடி கர்னல் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

குறிப்பாக இரவு 7:30 மணி முதல் 9:30 மணி வரை பெரும்பாலான ஊர்வலங்கள் தெருக்களில் செல்லும் போது தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். விருந்து மண்டபங்கள், திருமண அரங்குகள் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த காலக்கட்டத்தில் பல திருமணங்கள் நடைபெறும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாயாபுரி, சட்டர்பூர், பஞ்சாபி பாக் மற்றும் ஜிடி கர்னல் சாலை போன்ற சில இடங்களில், அரங்குகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

மெஹ்ராலி-குர்கான் சாலை, அதைச் சுற்றி பல திருமண அரங்குகளைக் கொண்ட பகுதிகள் அதிகளவிலான போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார். சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை இழுத்துச் செல்ல கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அவர் கூறினர். 

பெங்களூருவின் கம்பாலா.. பிரபல எருது பந்தயம்.. வெளியான புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் - முக்கிய அப்டேட்ஸ்!

இந்தி காலண்டரின் படி, நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான காலம் திருமண செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் இந்த காலக்கட்டத்தில் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகீறது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வழங்கிய மதிப்பீட்டின்படி, இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 38 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios