பெங்களூருவின் கம்பாலா.. பிரபல எருது பந்தயம்.. வெளியான புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் - முக்கிய அப்டேட்ஸ்!
Bengaluru Kambala Festival : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'கம்பாலா' என்னும் எருமை பந்தயம் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவின்போது தவிர்க்க வேண்டிய சாலைகள், மற்றும் புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் இந்த வார இறுதியில் "கம்பாலா" என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தை நடத்தவுள்ளது அம்மாநில அரசு. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விஷேஷ பந்தயத்தைக் காண இந்த ஆண்டு சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு போக்குவரத்து போலீசார், சில சாலைகளை தவிர்த்துவிட்டு, மாற்று வழிகளில் பயணிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்! ரூ.100 கோடி மோசடியில் என்ன தொடர்பு?
பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும், பயணிகளை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும் வலியுறுத்தியுள்ளது. இதனால் விமான நிலையத்தை அடைய போதுமான நேரம் அவர்களுக்கு கிடைக்கும் என்று அது கூறியுள்ளது. அப்டேட்களை பெற தங்கள் இணையத்தை சரிபார்த்துக்கொள்ள அது மேலும் அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தவிர்க்கப்பட வேண்டிய பெங்களூரு சாலைகள் இதோ.. அரண்மனை சாலை : மைசூர் வங்கி வட்டத்தில் இருந்து வசந்தநகர் சுரங்கப்பாதை வரை. அதே போல எம்.வி.ஜெயராம் சாலையை பொறுத்தவரை - பிடிஏ சந்திப்பு அரண்மனை சாலையில் இருந்து சக்கரவர்த்தி லேஅவுட் வரை.
வசந்தநகர் அண்டர்பாஸ் முதல் பழைய உதயா டிவி சந்திப்பு வரை. (இரு திசைகளும் அடங்கும்) பெல்லாரி சாலை : மேக்ரி சர்க்கிளிலிருந்து எல்ஆர்டிஇ சந்திப்பு வரை. கன்னிங்காம் சாலை : பாலேகுந்திரி சந்திப்பிலிருந்து லீ மெரிடியன் சுரங்கப்பாதை வரை. மில்லர்ஸ் சாலை : பழைய உதயா டிவி சந்திப்பு முதல் எல்ஆர்டிஇ சந்திப்பு வரை. ஜெயமஹால் சாலை : பெங்களூரைச் சுற்றியுள்ள சாலைகள் உட்பட ஜெயமஹால் சாலை வரை.
அரண்மனை சாலை உட்பட அரண்மனை மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக சரக்கு வாகனங்கள் நகரின் ஐந்து வெவ்வேறு இடங்களில் திருப்பி விடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.