Asianet News TamilAsianet News Tamil

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. பணியில் களமிறங்கிய ட்ரோன்கள்.. தயார் நிலையில் 41 ஆம்புலன்ஸ் - முழு விவரம்!

Uttarakhand Tunnel Collapse : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஒரு சுரங்க விபத்தில் சுமார் 12 நாட்களுக்கும் மேலாக 41 பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

Uttarakhand Tunnel Collapse Drone Cameras in Action Rescue Operation in full fledge ans
Author
First Published Nov 24, 2023, 9:44 AM IST | Last Updated Nov 24, 2023, 9:44 AM IST

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன் கருத்துப்படி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான கிடைமட்ட துளையிடும் நடவடிக்கை கூடுதல் தடைகளை சந்திக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைக்கான காலக்கெடுவை கணிப்பது சவாலாக உள்ளது என்று ஆவர் தெரிவித்தார். 

அந்த விபத்து நடந்த இடம் முழுவதும் இப்போது ட்ரோன்கள் கொண்டு நிலையை ஆராய்ந்து வருவதாகவும், உள்ளே சிக்கிய ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒன்று என மொத்தம் 41 ஆம்புலன்ஸ்கள் சுரங்கப்பாதை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடுமையாக காயமடைந்த தொழிலாளர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு. ஹஸ்னைன் மேலும் கூறினார்.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்! ரூ.100 கோடி மோசடியில் என்ன தொடர்பு?

இடிந்து விழுந்த அந்த சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள், சக்கர ஸ்டிரெச்சர்களில் ஒரு பெரிய குழாய் மூலம் ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். விரைவில் இந்த பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மீட்பு பணியில், NDRF பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைவார்கள் என்றும், அவர்கள் தொழிலாளர்களை அடைந்ததும், அவர்கள் ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் என்று திரு கர்வால் கூறினார். இந்த முறையில் யாருக்கும் ஆபத்து இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

காருக்குள் பிணமாகக் கிடந்த இந்திய மாணவர்! அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம்!

மீட்பு பணியில் உள்ள NDRF பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரை ஒரு கயிற்றால் திறமையாக கையாளும் போது, ​​ஒவ்வொரு தொழிலாளியும் ஸ்ட்ரெச்சரில் கவனமாக நிலைநிறுத்தப்படுவார்கள். சுமார் 13 நாட்களாக உள்ளே சிக்கியுள்ள பணியாளர்களுக்கு பால் மற்றும் கிச்சடி போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios