மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்.. தட்டி தூக்கிய போலீஸ் - வைரல் வீடியோ!
கேரளா, வயநாட்டில் உள்ள எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், வயநாட்டின் எம்பியாக இருக்கிறார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்பெட்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டதாக கல்பெட்டா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு இந்த சேதத்தை செய்தது என்று காங்கிரஸ் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்குப் பிறகு 12க்கும் மேற்பட்ட எஸ்.எஃப்.ஐ.வினர் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்தியதாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்த சம்பவத்தின் வீடியோவைக் குறிப்பிட்டு, தேசத் தந்தை மகாத்மாவின் புகைப்படத்தை காங்கிரஸ் தொண்டர்கள் தான் சேதப்படுத்தினார்கள் என்று கூறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகுஅலுவலகத்தை விட்டு வெளியேறியபோது மகாத்மா காந்தியின் உருவம் அப்படியே இருந்தது என்றும், பிறகு காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தினர் என்றும் கூறினார்கள்.
மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?
காங்கிரஸ் கட்சியினர் படத்தை சேதப்படுத்தியதாக கேரள முதல்வர் பினராயி விஜயனும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில், தேசதந்தை காந்தியின் படம் உண்மையில் காங்கிரஸ் தொண்டர்களால் அழிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி தற்போது கைது செய்துள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் வழக்கமான பொய் தான் என்றும், போலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்