Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் ஆபாச வலைத்தளங்கள் முடக்கம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

3500 porn sites banned in india
3500 porn sites banned in india
Author
First Published Jul 14, 2017, 4:07 PM IST


கடந்த மாதத்தில் 3,500 குழந்தைகள் சார்ந்த ஆபாச தளங்கள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் சார்ந்த ஆபாச வலைத்தளங்களின் அச்சுறுத்தலைப் போக்க மத்திய அரசின் நடவடிக்கை தொடரபான கோரிக்கை அடங்கிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்விடம் பேசிய மத்திய அரசு, சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகளைப் பொருத்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியது.

இது குறித்து பேசிய கூடுதல் சொசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், பள்ளி பேருந்துகளில் ஜாமர்களைப் பொருத்துவது சாத்தியமற்றது என்று கூறினார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளத்தின் பயன்பாட்டைத் தடுக்க ஜாமர் கருவிகளைப் பொருத்த முடியுமா என்று கேட்டுள்ளது என்றார்.

இருவரின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2 நாட்களுக்குள் குழந்தைகள் ஆபாச தளங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios