Asianet News TamilAsianet News Tamil

BBC documentary: பிபிசியின் ஆவணப்படம் பாரபட்சமான பிரசாரம்... 300 முக்கியப் பிரமுகர்கள் கண்டனக் கடிதம்

2002 கோத்ரா கலவரம் தொடர்பாக பிபிசி எடுத்த ஆவணப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து 302 முக்கியப் பிரமுகர்கள் கையொப்பமிட்ட கண்டனக் கடிதம் வெளியாகியுள்ளது.

302 Signatories Eminent Citizens Write a Letter Against BBC for the documentary on modi
Author
First Published Jan 21, 2023, 5:37 PM IST

பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி ஊடக நிறுவனம் பிரதமர் மோடி குறித்து ‘India: The Modi Question’ என்ற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. இரு பகுதிகளாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பகுதி படம் கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அந்தப் படத்தைக் கண்டித்து 13 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 33 உயர் அதிகாரிகள், 133 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், 156 ஓய்வுபெற்ற ஆயுதப்படை அதிகாரிகள் உள்பட 302 பேர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கண்டனக் கடிதம் பிபிசியின் ஆவணப்படம் பாரபட்சமான பிரச்சாரம் செய்வதாக விமர்சிக்கிறது. “பிபிசியின் தொடர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலமாக ஜனநாயக நாடாக இயங்குவதன் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தியா நாட்டு மக்களின் விருப்பப்படி செயல்படும் நாடு” என்றும் குறிப்பிடுகிறது.

220 கி.மீ. அதிவேகத்தில் புதிய அதிவிரைவு வந்தே பாரத் ரயில்!

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.

கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த பாஜக அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை எடுத்த பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் எம்.பி. இம்ரான் ஹூசைன் கோத்ரா கலவரம் ஓர் இன அழிப்புச் செயல் என்று விமர்சித்துள்ளார்.

Modi BBC Documentary: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை என்ன? மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது?

இந்த ஆவணப்படம் குறித்து அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசும் பிபிசியின் ஆவணப்படத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, “பாரபட்சமாக, உண்மைத்தன்மை இல்லாமல், கண்ணியத்தன்மையற்று, முற்றிலும் காலனி ஆதிக்க மனோநிலையுடன் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது” எனவும் கண்டித்தது.

இவ்வாறு கடுமையான எதிர்ப்பு மூண்டதன் எதிரொலியாக இந்த ஆவணப்படம் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios