220 கி.மீ. அதிவேகத்தில் புதிய அதிவிரைவு வந்தே பாரத் ரயில்!
200 கி.மீ. உச்ச வேகத்தில் பயணிக்கும் 200 புதிய வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே ரயில்களைத் தயாரித்து இயக்குவதற்காக இந்திய ரயில்வே வந்தே பாரத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்கள் படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் 400 புதிய வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க ரயில்வே முடிவுசெயதுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் 200 ரயில்கள் இருக்கை வசதி கொண்டவையாக இருக்கும் என்றும் மீதி 200 ரயில்கள் படுக்கை வசதி கொண்டவையாக அமையும் என்றும் ரயில்வே தெரிவிக்கிறது.
இதில் இருக்கை வசதி மட்டும் கொண்ட ரயில்கள் 180 கி.மீ. உச்ச வேகம் கொண்டவையாக வடிவமைக்கப்படும். படுக்கை வசதி கொண்டவை 220 கி.மீ. உச்ச வேகம் உடையவையாக இருக்கும்.
இந்தியா மீது தண்ணீர் போர் தொடுக்க தயார் ஆகும் சீனா
220 கி.மீ. உச்ச வேகம் கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட உள்ளன. இதனால், ரயில் பெட்டிகளின் எடை குறைகிறது. அதன் மூலம் ரயிலை இயக்கும் வேகமும் 40 கி.மீ. கூடுகிறது. இப்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களிள் அதிகபட்ச வேகம் 180 கி.மீ. ஆகும். மேலும் அவை இரும்பால் தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்புக் காரணங்களுக்காக 130 கி.மீ. வேகத்தில்தான் இப்போது வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சென்னையிலும், மகாராஷ்டிராவில் லத்தூரிலும், ஹரியானாவின் சோனேபட்டிலும் புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் வேலை நடைபெற உள்ளது. தயாரிப்பு ஒப்பந்தத்துக்கு நான்கு பெரிய உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக 400 வந்தே பாரத் ரயில்களும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் தயாராகும் படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில் தற்போது டெல்லி – மீரட் இடையே இயக்கப்படும் ஆர்.ஆர்.டி.எஸ். ரயிலுக்கு மாற்றாக இயக்கப்படும். இந்தப் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
Leopard vs Porcupines Video: குட்டிகளை வேட்டையாட வந்த சிறுத்தைக்கு ஆட்டம் காட்டிய முள்ளம்பன்றிகள்!
இதனை முன்னிட்டு, டெல்லி – மும்பை, டெல்லி – கல்கத்தா ரயில்வே வழித்தடங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே சிக்னல் அமைப்பது, பாலங்கள் கட்டுவது, வேலி அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இதேபோல இருக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில் முதலில் இப்போது பயன்பாட்டில் உள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குப் பதிலாக இயக்கப்படும்.