Leopard vs Porcupines Video: குட்டிகளை வேட்டையாட வந்த சிறுத்தைக்கு ஆட்டம் காட்டிய முள்ளம்பன்றிகள்!
இரண்டு முள்ளம்பன்றிகள் குட்டிகளை சிறுத்தையிடமிருந்து காப்பாற்றப் போராடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அந்த வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலாகப் பரவத் தொடங்கிவிட்டது.
அந்த வீடியோவில் இரண்டு முள்ளம்பன்றிகள் தங்கள் இரண்டு குட்டிகளை வேட்டையாட வந்த ஒரு சிறுத்தையிடமிருந்து காப்பாற்றப் போராடும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிறுத்தை விடாப்பிடியாக முயற்சி செய்யும்போது, பெரிய முள்ளம்பன்றிகள் இரண்டும் குட்டிகளை சிறுத்தை நெருங்க விடாமல் அரணாக நிற்கின்றன.
குட்டி முள்ளம்பன்றிகளும் சிறுத்தையிடம் மாட்டிக்கொள்ளாத வகையில், சாமர்த்தியமாக பெரிய முள்ளம்பன்றிகளுக்கு இடையில் ஒளிந்துகொள்கின்றன. கடைசியில் சிறுத்தை முள்ளம்பன்றி குட்டியைப் பிடித்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அதற்குள் இந்த ஒரு நிமிட வீடியோ முடிந்துவிடுகிறது. ஆனால், அதுவே நெட்டிசன்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
ஒருவர், “இது இயற்கை இயக்கிய இருக்கும் திரைப்படம் போல உள்ளது” என்று சொல்லி உள்ளார். மற்றொருவர், “இந்தக் கதை நல்லபடியாக முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “அந்தக் குட்டிக்கு கடைசியில் என்ன ஆனது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். இப்படி பலரும் குட்டி சிறுத்தையிடமிருந்து தப்பித்ததா இல்லையா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
“முள்ளம்பன்றியின் முள்ளில் குத்தி காயம்பட்டுக்கொள்வோம் என்று சிறுத்தைக்குத் தெரியாதா?” என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். ஒருவர், “வீடியோ முடிந்துவிட்டது. ஆனால், இந்தப் போராட்டத்தின் முடிவில் சிறுத்தை வெற்றிகரமாக தான் குறிவைத்த குட்டியைப் பிடித்திருக்கும்” என்று முடிவு சொல்கிறார்.
பள்ளிச் சிறுவர்கள் காண்டம் பயன்படுத்த தடை இல்லை: கர்நாடக அரசு விளக்கம்!
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சிந்தனையைத் தூண்டு இந்த வீடியோ பற்றி உங்களுக்குத் தோன்றுவது என்ன? கடைசியில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.