சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, இன்று (மார்ச் 24) காலை 10:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க..டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோளில் 2.7 ஆக பதிவு!!

தேசியத் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மேற்கு தில்லியில் மையம் கொண்டிருந்ததாகவும், அதன் ஆழம் 5 கிலோமீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

அதேபோல 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு நகரத்தை உலுக்கியது. அதன் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இருந்தது, அதன் ஆழம் 156 கிலோமீட்டராக இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

இதையும் படிங்க..திடீர் நிலநடுக்கம்.. இருட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - காஷ்மீரில் நடந்த சம்பவம்