Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோளில் 2.7 ஆக பதிவு!!

டெல்லியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

earthquake again in delhi with 2.7 magnitude
Author
First Published Mar 22, 2023, 7:22 PM IST

டெல்லியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் நேற்று (21.03.2023) இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி மக்கள் மத்தியில் இருந்து விலகுவதற்குள் மீண்டும் இன்று மாலை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. 

இதையும் படிங்க: இந்தியாவில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு… உயர்மட்டக்குழுவுடன் பிதமர் மோடி ஆலோசனை!!

இந்த நிலநடுக்கம் இன்று (22.03.2023) மாலை 4.42 மணியளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு டெல்லியில் 5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று இரவு இரவு 10. 17 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் 6. 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: பிரிட்டன் தூதரகத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கம்! இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி

சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் டெல்லி-என்சிஆர் முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டன. வல்லுநர்கள் முன்னறிவித்தபடி, இந்திய இமயமலைப் பகுதியைத் தாக்கும் பெரிய பூகம்பம் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த  விவரங்களும் வெளியாகவில்லை.  

Follow Us:
Download App:
  • android
  • ios