மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை முடித்துள்ள நிலையில், இன்று கொரோனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

 

கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்க ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையிலேயே இருந்து வருகிறது. இந்தியா கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. தற்போது முதல் கட்ட மனித சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-க்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் ரஷ்யா இந்த போட்டியில் முன்னணி வகிக்கிறது. இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் கொரோனாவில் இருந்து மனிதர்களை பாதுகாக்க முடியும் என மதிப்படப்படுகிறது

.
 
ஆனால் இந்த நிறுவனம் முதல் கட்ட பரிசோதனை குறித்த முடிவை இன்னும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் ‘‘இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது ஊக்கம் அளித்துள்ளது. முதல் கட்ட பரிசோதனைக்கான முடிவுகள் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படலாம்’’எனத் தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் சோதனைகள் வெற்றி அடைந்து விட்டால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.