தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டை நிறுத்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி அப்போது பயன்பாட்டில் இருந்த ரூ.500. ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், மாணவர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளுாகினர். அந்த நேரத்தில் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தட்டுப்பாட்டை போக்க 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.2000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் 2000 ரூபாய் நோட்டுக்களை முதலில் அறிமுகப்படுத்தும் போதே பின்பு படிப்படியாக குறைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது தொடரும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், மாநிலங்களவையில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டை நிறுத்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார்.