கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை... என்னானு தெரியுமா?
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.. இந்த வைரஸ் மரபணு மாறி 3 அலைகளாக வந்து தாக்கிய நிலையில் இந்த வைரஸ்-ல் இருந்து மக்களை காக்க தடுப்பூசி கண்டறியப்பட்டது. கொரோனாவை எதிர்க்கும் பேராயுதமாக தடுப்பூசி கருதப்பட்டது. அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,528 பேருக்கு பாதிப்பு.. 49 பேர் பலி
அந்த வகையில் இந்தியாவிலும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது கொரோனா பலி அதிகமாக இருந்த நிலையில், தடுப்பூசியின் காரணமாக அடுத்த இரண்டு அலைகளில் பலி எண்ணிக்கை குறைந்தது. இதனிடையே தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்திருப்பது நமக்கு பெருமைக்குரிய விஷயம். இந்த சாதனைக்காக சுகாதார நல பணியாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு பாராட்டுதல்களை நான் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதன் மூலம் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் முதல் டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.