உத்தரகாண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு!!
சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றில் நமாமி கங்கை திட்டம் நடைபெறும் இடத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் மின்சாரம் பயந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் லக்நந்தா ஆற்றில் நமாமி கங்கை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இங்கு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியது. இதில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு போலீஸ்காரர், ஐந்து பாதுகாவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரகாண்ட் போலீஸ் ஏடிஜிபி வி. முருகேசன் கூறுகையில், ''இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் கம்பிகளின் மீது மின்சாரம் பாய்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணையில் எதனால் விபத்து ஏற்பட்டது என்ற முழு விவரமும் தெரிய வரும்'' என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடியின இளைஞரை தாக்கி, வாயில் சிறுநீர் அடித்த கொடூரக் கும்பல்.. மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ''இது ஒரு சோகமான சம்பவம். மாவட்ட நிர்வாகம், போலீஸ், எஸ்டிஆர்எப் ஆகியவை சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. காயம் அடைந்தவர்கள் ரிஷிகேசில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மாற்றப்பட்டு வருகின்றனர்'' என்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே மிக கன மழை பெய்து வருகிறது. மேலும் கன மழை இருக்கும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. சமோலி, ஹரித்வார், ருத்ரபிரயாக் ஆகிய இடங்கள் ஏற்கனவே கடுமையான தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. லஸ்கர், கான்புர், ரூர்கி ஆகிய கிராமங்கள் உள்பட மொத்தம் 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாஜ் மஹாலை சூழ்ந்த வெள்ளம்; டெல்லியை மீண்டும் மிரட்டும் யமுனை!!