Asianet News TamilAsianet News Tamil

அனைத்து வங்கிகளுக்கும் 12 நாட்கள் விடுமுறை.. அறிவித்தது மத்திய வங்கி..

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கும் வரும் பிப்ரவரி மாதத்தில்,12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

12 days holiday for all banks in the month of February
Author
India, First Published Jan 29, 2022, 5:11 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களை ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. கடந்த மாதத்திலேயே, பொது விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகைகள் என்று 16 நாட்கள் வங்கிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப் படி, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் மாநில வாரியாக பொருந்தும். இந்த விடுமுறை நாட்களில் வார இறுதி நாட்களும் அடங்கியுள்ளது. அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டு அடிப்படையிலும், பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்கள், அந்தந்த மாநிலத்தில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மூடப்பட்டிருக்கும்.

மத்திய வங்கி, வங்கி விடுமுறை நாட்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது.செலாவணி முறிச் சட்டம் மற்றும் ரியல்-டைம் கிராஸ் செட்டில்மென்ட் விடுமுறை,செலாவணி முறிச் சட்ட அடிப்படையில் விடுமுறை, வங்கிக் கணக்குகள் மூடுதல் விடுமுறை ஆகியவைகளாகும்.திரிபுரா மாநிலத்தின் அகர்தலா, ஓடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, வசந்த பஞ்சமியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சண்டிகரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 16 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில நகரங்களான மும்பை மற்றும் நாக்பூரில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 19 அன்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலின்படி, 2022 ஜனவரியில் மொத்தம் 16 நாள்களுக்கு வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. பண்டிகை தினங்களுக்கான விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை என அனைத்தும் சேர்த்து 16 நாள்கள் வரை ஜனவரி மாதத்தில் விடுமுறை விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் 16 நாள்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்காது. சில விடுமுறை நாள்கள் சிறப்பு பண்டிகைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios