சீனாவை சீண்டிய கொரொனா வைரஸ்..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்  4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகின்றது. இதனால் சீனா பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள தனது 2000 சிற்றுண்டி கிளைகளை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை கிடு கிடு பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் உள்ள மிகப்பெரிய காஃபி செயின் நிறுவனமானது ஸ்டார்பக்ஸ். கொரொனா தாக்குதலால்  ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சீனாவில் 4,292 கடைகளை கொண்டிருந்தாலும்  தற்போது 2000 கடைகளை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கொரோனாவின் தாக்கத்தால் இந்த நிறுவனம் பொருளாதாரம் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பானது மூடப்பட்ட கடைகள்  இன்னும் எத்தனை நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் என்பதை பொறுத்தே 
மூடப்பட்டிருக்கும், இன்னும் எத்தனை நாட்களுக்கு கடைகள் மூடவேண்டியிருக்கும் என்று தெரியாத கவலையை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

T.Balamurukan