Asianet News TamilAsianet News Tamil

Ice Cube: ஐஸ்கட்டியின் தீமைகள் தெரிந்த உங்களுக்கு, அதன் நன்மைகள் தெரியுமா?

குளுகுளுவென புத்துணர்ச்சி தரக்கூடிய ஐஸ்கட்டிகளின் தீமைகள் தெரிந்த அளவிற்கு, அதனுடைய பல முழுமையாக நன்மைகள் தெரிய வாய்ப்பில்லை. இந்தப் பதிவில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

You know the disadvantages of ice cube, Do you know its benefits?
Author
First Published Dec 24, 2022, 1:12 PM IST

கோடைகாலம் வந்து விட்டாலே அனைவருக்கும் பிரச்சனையாக இருப்பது கொளுத்தும் வெயிலின் தாக்கம் தான். இதலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான பானங்களை அருந்துவது மற்றும் ஐஸ் தண்ணீரை குடிப்பது என மக்கள் என்னென்னமோ செய்கின்றனர். இருப்பினும், வெயிலின் தாக்கம் ஏதாவதொரு வகையில் நம்மைத் தாக்கி கொண்டே இருக்கும்.

நாம் தொடர்ந்து ஐஸ்கட்டிகளை எடுத்துக் கொண்டால், அது பலவித ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், குளுகுளுவென புத்துணர்ச்சி தரக்கூடிய ஐஸ்கட்டிகளின் தீமைகள் தெரிந்த அளவிற்கு, அதனுடைய பல முழுமையாக நன்மைகள் தெரிய வாய்ப்பில்லை. இந்தப் பதிவில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

ஐஸ்கட்டியின் நன்மைகள் 

நாம் உடுத்தும் உடைகள் சுருக்கமாக இருந்தால், அதனை ட்ரையரில் போடும் சமயத்தில், அதனுடன் சிறிதளவு ஐஸ்கட்டிகளை சேர்த்துப் போட்டால் உடைகளில் சுருக்கமின்றி இருக்கும்.

தூக்கமின்மை, அலைச்சல், தூசி மற்றும் மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் அதிவேகமாக பொலிவை இழந்து, புத்துணர்ச்சியையும் இழந்து விடுகிறது. உடலில் வழியும் வியர்வையினால் நம் முகம் வாடி விடும். இதற்கு ஐஸ் கட்டியை எடுத்து மெதுவாக முகத்தில் மசாஜ் செய்வது போல தடவினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

உங்கள் ஆடையிலோ, தலை முடியிலோ, செருப்பிலோ மற்றும் உடம்பிலோ ஏதேனும் ஒரு பொருள் ஒட்டிக் கொண்டால் அந்த இடத்தில், ஐஸ்கட்டியை வைத்து தேய்த்தால் போதும் எளிதில் அவற்றை நீக்கி விடலாம்.

You know the disadvantages of ice cube, Do you know its benefits?

உடலில் ஏதேனும் காயம் அல்லது இரத்தக்கட்டு ஏற்பட்டால், அந்த இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பதனால் காயத்தை விரைவில் சரி செய்யலாம்.

மொச்சைக் கொட்டையின் எண்ணில் அடங்கா ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஐஸ்கட்டிகளுக்கு பதிலாக, ஐஸ் சிப்ஸ்களை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் காலை நேரத்தில் ஏற்படும் சோம்பல், குமட்டல், அதிக சூடு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

ஐஸ்கட்டிகள் உடல் வலியை நீக்குகிறது. மூட்டு வலி மற்றும் முதுகு வலி என உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும், ஐஸ்கட்டியைத் தடவினால் வலி பறந்து போகும்.

முகத்தில் அரிப்பு அல்லது அலர்ஜி உண்டாகும் நேரத்தில், ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும். அதோடு, அலர்ஜியையும் பரவாமல் தடுக்கிறது.  

ஐஸ்கட்டி பல நன்மைகளை அளித்தாலும், இதனையும் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அது ஆபத்தையே விளைவிக்கும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios