மொச்சைக் கொட்டையில் எண்ணில் அடங்கா ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
ஆரோக்கியம் நிறைந்த பல உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் தானியங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு.
நாம் வாழ்வதற்கு அடிப்படையாகவே உணவு தான் மிகவும் முக்கியமானது. இப்படியாக நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியதும் அவசியம். ஆரோக்கியம் அற்ற உணவுகளை உட்கொண்டால், உடலுக்கு பல தீமைகள் உண்டாகும். ஆரோக்கிய உணவு என்றவுடனே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காய்கறி மற்றும் பழங்கள் தான். ஆனால், இதையும் தாண்டி ஆரோக்கியம் நிறைந்த பல உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் தானியங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு.
மொச்சைக் கொட்டை
தானியங்களில் பல வகைகள் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மையைத் தருகிறது. அவ்வகையில், நாம் இப்போது பார்க்கப் போகும் தானியம் மொச்சைக் கொட்டை. மொச்சைக் கொட்டையிலும் நமது உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உள்ளது. மொச்சைக் கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை மற்றும் நாட்டு மொச்சை என பல வகைகள் உள்ளன. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், வெயிலில் காய வைக்கப்பட்ட பின்னரும் சமைத்து சாப்பிடலாம்.
மொச்சைக் கொட்டையின் நன்மைகள்
- மொச்சைக் கொட்டை நமது உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல்ஸ் போன்றவற்றை அதிக அளவில் கொண்டிருக்கிறது.
- மொச்சைக் காயை வேக வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ அதிகளவில் இருக்கிறது.
- மொச்சைக் கொட்டையில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. மொச்சைக் கொட்டை உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதனை உட்கொண்டால் உடல் எடையானது மிக வேகமாக குறையும்.
- மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, சாப்பிட்ட உணவை உடனடியாக செரிமானம் ஆகச் செய்து, மலச்சிக்கலை வராமல் தடுக்கிறது.
- இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் இருக்க மொச்சைக் கொட்டை உதவி புரிகிறது.
- உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக் கொட்டை உதவி செய்கிறது.
- பெருங்குடலில் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.
Rice Foods: அரிசி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
யாரெல்லாம் உண்ணக் கூடாது
மொச்சைக் கொட்டையை மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், சக்கரை நோய் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் உண்ணக் கூடாது.
அதேபோல சிறுநீகரத்தில் கல் இருப்பவர்கள், வாதம் மற்றும் ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் தொடர்பான வேறு நோய் உள்ளவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது